பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கட்டுரைக் கொத்து

கலித்தொகை பாலேயின் இயல்பை,

மரல்சாய மலைவெம்ப மந்தி உயங்க

உரல்போல் அடிய உடம்புயங் கியானே

ஊறுநீர் அடங்கலின் உண்கயம் காணுது

சேறு சுவைத்துத்தம் செல்லுயிர் தாங்கும்

புயல்துளி மாறிய போக்கரும் வெஞ்சுரம் என்று கூறுகிறது. க லிங்க த் துப் பரணி பாலேயின் தன்மையினே,

ஆடுகின்ற சிறைவெம் பருந்தின் நிழல் அஞ்சிஅக்கடு வனத்தைவிட்டு ஒடுகின்ற நிழல்ஒக்கும் கிற்கும் நிழல் ஓரிடத்தும் உள அல்லவே.

என்றும்,

தீயின்வாயின்ர்ே பெறினும் உண்பதோர் சிங்தைகூர வாய் வெந்துலர்ந்துசெங் காயின்வாயின் நீர் தன்னநீர்என கவ்வி காவில்ை நக்கி விக்குமே என்றும் கூறுகிறது. இங்த அளவிலும் கலிங்கத்துப் பரணி பாலேயின் வெம்மைக் கொடுமையினே உணர்த்தி அமையவில்லே.

பாலை நிலத்தில் உள்ள ஒரு மணலேக் கொண்டு சென்று கடலில் இட்ட அளவில் கடல் அப்பாலே மணல் ஒன்றன் வெப்பத்தால் வறண்டுபோய் இருக் குமே அதன்பின் கரை வழியே இலங்கையைச் சேர்க் திருக்கலாமே ! ஏன் குரங்குகள் மலைகளேயும் கற்களே யும் கொண்டுவந்து கடலில் பாலம் அமைக்கத் துன்பப் பட்டிருக்கவேண்டும் என்ற கருத்தில்,