பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கட்டுரைக் கொத்து

பாலையில் அகப்பட்டவர்கள் பட்ட பாட்டினைப் புலவர் கல்லும் கரைந்துருகும்வண்ணம் பாடி அறிவித் துள்ளனர். அதுவே.

பாடுறு புனல்அற் ருெவ்வொரு காதம்

படுபரல் பரப்புகால் திசைக்கும் ஒடுவர் திரும்பி மீள்குவர் அடிசுட்

டுச்சியும் வெதுப்புற உலர்ந்து வாடுவர் துகில்கீழ்ப் படுத்திஒட் டகத்தின்

வயிற்றிடைத் தலைநுழைத் திடுவார் தேடும் பொருட்கோ உயிர்இழப் பதற்கோ

செறிந்திவண் அடைந்தனம் என்பர்

என்பதாகும். இப்பாடலில், 'அடிசுட்டு உச்சியும் வெப்புற உலர்ந்து வாடுவர்' என்பதும், ஒட்டகத்தின் வயிற்றிடைத் தலே நுழைத்திடுவர் என்பதும், உள் ளத்தை உருக்கவல்ல வரிகள். பாலையின் கொடுமை யினைக் கூறும்போது, அரிய உண்மைக் கருத்துக்களை யும் இயைத்துப் பாடுவது புலவர்களின் புலமையாகும். இதனைக்கலித்தொகையில் பாலக் கலி பாடிய புலவர்,

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச் சிறியவன் செல்வம்போல்

சேர்ந்தார்க்கு கிழல்இன்றி யார்கண்ணும் இகந்துசெய்

திசைகெட்டான் இறுதிபோல் வேரொடும் மரம்வெப்ப

விரிகதிர் தெறுதலின் அலவுற்றுக் குடிசு வ

ஆறின்றிப் பொருள் வெஃகிக்