பக்கம்:கட்டுரை வளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியங்களில் இதிகாசக் கருத்துகள் 101

‘அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த

அருங் திறல் பிரிந்த அயோத்தி போலப் பெரும்பெயர் மூதுார் பெரும்பே துற்றதும்’

என்று கூறியிருப்பதினின்றும், இராமன் காடு சென்ற போது அயோத்தி மக்கள் எவ்ணவாறு துன்புற்றார்களோ அவ்வாறே கோவலன் பிரிவால் புகார் நகர மக்களும் துன்புற்றார்கள் என்பது பெறப்படுகின்றது.

மேலும், இராம காதையின் முழு வரலாறும்அதாவது இராமன் தம்பி இலக்குவனுடன் காடு சென்று இலங்கையை அழித்த செய்தி-ஆய்ச்சியர் குரவையில் கூறப்படுகிறது.

‘மூவுலகும் ஈரடியான் முறைகிரம்பா வகைமுடியத்

தரவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போங்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கைக்கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே! திருமால் சீர்கேளாத செவியென்ன செவியே!”

-சிலம்பு, ஆய்ச்சியர் குரவை : 35

இலக்குவன் தன் தமையன் இராமனுக்கு ஆற்றிய அருந்தொண்டினைப் பெருங்கதை பின் வருமாறு குறிப் பிடுகிறது :

‘இறைமீக் கூறிய இராமன் தம்பி

மறுவொடு பெயரிய மதலைக்கு இயைந்த ஆனாப் பெரும்புகழ் யாமும் எய்தத் தேனார் தாமரைத் திருந்துமலர்ச் சேவடி வழிபா டாற்றுதும்”

-பெருங்கதை, 11 : 24, 90-94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/103&oldid=1377406" இலிருந்து மீள்விக்கப்பட்டது