பக்கம்:கட்டுரை வளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 கட்டுரை வளம்

யினைக் காணலாம். பகலும் இரவும், இன்பமும் துன்பமும் மேடும் பள்ளமும், வளமையும் வறுமையும், காதலும் போரும் இத்தகைய இருமுனைக் காட்சிகளேயாகும்.

பழந்தமிழர்கள் காதல் நெஞ்சம் வாய்க்கப் பெற்ற வர்கள்; அதே நேரத்தில் வீரப்பண்பும் நிறைந்தவர்கள். பழந்தமிழ்க் குடியின் பெருமையினைப் பேச வந்த புறப் பொருள் வெண்பா மாலை ஆசிரியர் ஐயனாரிதனார். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி’ என்று தமிழர்தம் பண்டைப் பெரு வீரத்தினைப் பாராட்டிக் கூறினார். மற்றவனிடத்திலே மாறுபாடு கண்ட விடத்துப் பகைமை தோன்றுகின்றது; அவனை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று அடங்காச் சீற்றம் எழுகின்றது; அரசர்கள் இடையில் தாம் ஆளும் இடம் சிறிது என்கின்ற காரணத்தால், ஊக்கம் சுரந்து உள்ளத்தை உந்தித் தள்ளுகின்றது. எனவே, மாற்றானை வெல்ல வேண்டும் என்று அரசன் மண்கொளப் படை நடத்திச் செல்கின்றான். அந்நாளைய மனிதன் புகழ் பெறு வதற்குரிய வழியாக வீரத்தினையும் எண்ணினான்; ஏன்? வீரத்தை விளைத்துப் பெறும் புகழ் பெரிதென்றும்கூடக் கருதினான். புகழெனின் உயிரும் கொடுத்தான். நில்லாமை நிறைந்த உலகத்தில் தன் பெயர் நிலைக்க வேண்டுமென்று எண்ணிய அவன், தன் புகழை நிறுவிவிட்டுச் சென்றான் . இதனையே 'இடைக்குன்றுார் கிழார்’ என்னும் புலவர்.

‘ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும்

புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை’

-புறநானுாறு, 76 : 1-2

என்று குடுப்பிட்டுப் போந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/106&oldid=1377429" இலிருந்து மீள்விக்கப்பட்டது