பக்கம்:கட்டுரை வளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணப் போர்க்களங்கள் 107

கேட்டான். அவள் உறையும் மலையை விசுவாமித்திரர் இராமனுக்குக் காட்டிய அளவில் தாடகை பேராரவாரத், துடன் தோன்றி, அவர்களை நோக்கி நகைத்து வீரவுரை பகர்ந்தாள்.'வேல்கொண்டு எறிவேன்’ எனச் சினந்து கூறி னாள் காடுறை வாழ்க்கையளாய் மன்னுயிர் அனைத்தை யும் வயிற்றில் இடும் ஆயிரம் யானைப் பலக் ணகொண்ட தாடகை பெண் என்பதனால், அண்ணல் இராமன் கணை தொடுத்து அதன்வழித் தன் வீரத்திற்கு இழுக்குத் தேடிக் கொள்ள விரும்பவில்லை இராமனின் இக் கருத்தினை உணர்ந்த முனிவர், தீமையெலாம் புரிபவள் இவள்; மன்னும் பலஉயிர்களை மாய்ப்பவள் இவள்; இவளைப் பெண் எனல் பெருந்தீது! குற்றமற்ற அறத்தின் வழி நின்று பார்ப்பினும், இவளைக் கொல்லாதிருப்பது அறமன்று; கொல்லுவதே அறம்’ என்று பொருந்தக் கூறினார். இராமனும் விசுவாமித்திர முனிவரின் உரையை வேதம் எனக் கொண்டு, தாடகைமேல் அம்பு செலுத்தினான். அவ்வம்பு அவள் நெஞ்சில் ஊடுருவிச் சென்று, அவளை மாய்த்து மண்ணில் வீழ்த்தியது: “புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளுரை எனப் புறம் போயிற்று எனக் கம்பன் உவமை காட்டுகின்றான். அப்பாடலைக் காண்போம்:

‘சொல்லொக்கும் கடிய வேகக் சுடுசரம் கரியசெம்மல்

அல்லொக்கும் நிறத்தினாள்மேல் விடுத்தலும் வயிரக்குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப் புல்லர்க்கு கல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே: -கம்பன், பால, தாடகை : 49 இதுவே காசுலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் உடற்றிய

கன்னிப் போராகும்.

அதன் பின்னர் இராமன் கண்ட போர், பரசுராம னோடு உடற்றியதாகும். மிதிலைப் பொன்னாம் சீதையை மணந்து தசரதனோடு அயோத்தி திரும்பும் இராமனோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/109&oldid=1377460" இலிருந்து மீள்விக்கப்பட்டது