பக்கம்:கட்டுரை வளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணப் போர்க்களங்கள் I 09

பக்தன்; ஆயினும் வாழ்வில் ஒரு குறை செய்தான். அதுவே தன் தம்பியாம் சுக்கிரீவன் மனைவியை நயந்து தன்னி டத்தில் வைத்துக் கொண்டது, அனுமன் துணையால் இராமனின் உதவி பெற்ற சுக்கிரீவன் வாலியின் இருப் பிடத்தைத் தேடிச்சென்று கண்டு, இராமன் உரைப்படி ஆரவாரித்து வாலியைப் போருக்கு அழைக்கிறான். தம்பி யின் போர் முழக்கம் கேட்ட தமையன் வாலி, போருக்கு ஆய்த்தமாகிறான். அவன் அன்பு மனைவி தாரை, இப் பொழுது இராமன் என்னும் நெடுந்துணை உடைமை யால் தம்பி போர் முழக்கம் அஞ்சாது செய்கிறான்’ என்று கூறி, இராமனின் நற்பண்புகளையும், பேராற்றலையும் எடுத்து பொழியவும், வாலி தடுத்து மொழிந்து, தன் தம்பியோடு, தான் நடத்தும் போரில் இராமன் தன் வில்லெடுத்துக் கணை தொடுக்க மாட்டான் எனக் கூறிக் குன்றின் புறத்துவந்து இருந்தான். அது பொழுது வாலியும் சுக்கிரீவனும் பெரும்போர் விளைக்க, விரைவில் சுக்கிரீவன் சோர்ந்து இராமனை அடைகிறான். ‘கொடிப்பூ அணிந்து செல்க’ என இராமன் சுக்கிரீவனைப் பணிக்கிறான். அவ்வாறே அவன் சென்று மறைய, அவனைப் பற்றிப் போரில் மோதும் பொருட்டு வாலி சுக்கிரீவனை மேலே தூக்கவும், வாலிமேல் இராமன் அம்பு விட்டான். அவ் வம்பு கனிந்த கதலிப் பழத்தினுள் செல்லும் ஊசியென உட்சென்று ஐந்து பூதங்களையும் வெற்றி கொள்ளும் வாலியின் மார் பைத் துளைத்து ஊடுருவியது. மேருமலை அடியற்று வீழ்ந்தது போன்று இணையற்ற வீரனாம் வாலி மண்மேல் சாய்ந்து, சுக்கிரீவனைப் பற்றிய பிடியை விடுத்து, அம்பினைப் பற்றியெடுத்து, அதில் இராமனது திருப்பெயர் இலங்கக் கண்டு, இராமனை இகழ்ந்தான். அதுபோது இராமன் அவன் எதிர் தோன்றுதலும், அவனை நோக்கி, வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தசரதன் எனும் தூயவன் மைந்தனா? பரதன் முன் தோன்றலா?” என்று கேட்டான் 'சீதையைப் பிரிந்ததனால் அறிவு குலைந்து நின்று விட்டனையோ?” என்று நகையுற நவின்றான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/111&oldid=1377588" இலிருந்து மீள்விக்கப்பட்டது