பக்கம்:கட்டுரை வளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணப் போர்க்களங்கள் I 13

கோநகரைக் கண்கொண்டு பார்க்கவில்லை; தன் அன்பர்

களை நோக்கவில்லை; அரண்மனைப் பெண்கள் தன்னைத் தனித்தனியே நோக்க, தான் அவர்களுள் ஒருத்தியையும் நோக்காமல், மண் மகள் எனும் ஒரு பெண்ணையே தலை

கவிழ்ந்து நோக்கினான் என்பதே கம்பசித்திரமாகும் :

வாரணம் பொருத மார்பும் வரையினை யெடுத்த தோளும் நாரத முனிவற் கேற்ப நயம்பட வுரைத்த நாவும் தாரணி மெளலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு வெங்கையோ டிலங்கை புக்கான்.”

“மாதிரம் எவையும் நோக்கான் வளங்கர் நோக்கான் வந்த காதலர் தம்மை நோக்கான் கடற்பெருஞ் சேனை நோக்கான் தாதவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்கத் தானப் பூதலம் என்னும் கங்கை தன்னையே நோக்கிப் புக்கான். ‘

-கம்ப, யுத்த, கும்பகருணன் 1,3

இராவணன் தன்னிலையுணர்ந்து தலைகுனிந்து இராமன் தன் நிலை நினைந்து, அதற்கெல்லாம் அவ்வள வாக வருந்தாமல், ‘சீதை தன்னை நகுவாளே’ என்று மட்டும் நாணத்தால் பெரிதும் மெலிந்தான் :

வான்நகும் மண்ணும் எல்லாம் நகும்மணி வயிரத் தோளான் “நான்நகு பகைவர் எல்லாம் நகுவர்’ என்று அதற்கு காணான் வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த

“சானகி நகுவள்’ என்றே நாணத்தால் சாம்பு கின்றான்.”

-கம்ப, யுத்த, கும்பகருணன் : 11

இந்நிலையில் *மகோதரன்’ வந்து இராவணனுக்குத் தேறுதல் மொழிகள் கூற, இராவணன் தன் வீரர்களை அனுப்பிக் கும்பகருணனை எழுப்பிவரப் பணிக்கின்றான். உறக்கத்தினின்றும் விழித்துவந்த கும்பகருணன், இராவண

‘க,-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/115&oldid=1377781" இலிருந்து மீள்விக்கப்பட்டது