பக்கம்:கட்டுரை வளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 கட்டுரை வளம்

னுக்கு எடுத்துக்காட்டிய அறவுரைகள் கணக்கில; அவை பயன்படவில்லை. எனவே, அவன் போர்க்களம் புகுகின் றான்; வீடணன் தன்னை இராமன் பக்கல் அழைத்ததை, மறுத்து, இராவணனுக்காக உயிர்ஈதலே தனக்கு ஏற்றது என்று கூறி, அவனை மட்டும் இராமன் பால் சேரச் சென்னான்,

‘நீர்க்கோல வாழ்வை நச்சி

நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டாற்கு

உயிர்கொடாது அங்குப் போகேன்’

எனத் தன் நன்றிக் கடன்பட்ட நல்வாழ்வினை எடுத்து நயமுற நவின்றான்.

பின்னர்ப் போர்க்களம் சென்று, அங்கதன், அனுமன், இலக்குவன் முதலியவர்களோடு போரிட்டான். தன் தங்கை மூக்கினை அறுத்தவன் இலக்குவனே என்பதுை அறிந்து, அடங்காச் சினங்கொண்டு, அவள் கூந்தலைத் தொட்டு ஈர்த்த கையை அறுத்து மண்ணிடைக் கிடத் துவன்’ என்றான். அதற்கு இலக்குவன் மறுமொழி வில்லினால் சொல்வேனேயல்லால் சொல்லினால் சொல்லக் கற்கவில்லை யான்’ என்றான்.

து


மாற்றங்கள் நும்பால், வில்லினால் சொல்லின் அல்லது வெந்திறல் வெள்கச் சொல்லி னால் சொலக் கற்றிலம் யாம்எனச் சொன்னான்’

-கம்ப, யுத்த, கும்ப : 235

இறுதியில் இராமனோடு போரிட்டு, இராமனின் அம் பால் கும்பகருணன் தலை துணிந்துபோய்க் கடலில் கலந்து மூழ்கியது. -

அடுத்து, இராவணன் மகன் இந்திரசித்துவிற்கும் இலக்குவனுக்கும் கடும்போர் விளைகிறது. பலரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/116&oldid=1377789" இலிருந்து மீள்விக்கப்பட்டது