பக்கம்:கட்டுரை வளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. பிள்ளைத் தமிழ்

தமிழ் இலக்கியம் மிகப்பழமையான இலக்கியம். உலகத்தின் மிகத்தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. இப்படிப்பட்ட பழமையான மொழியில் அமைந் துள்ள இலக்கியங்களும் மிகப் பழமையானவை என்பதில் ஐயம் இல்லை. காலத்திற்கேற்பக் கவிஞர்கள் தோன்று வார்கள் என்பது ஒரு வாக்கு. அதன் படி ஒரு காலத்தின் சூழ்நிலையை யொட்டி இலக்கியங்கள் அமையும். எனவே, காலத்திற்குக் காலம் தேவைக்கு ஏற்ப இலக்கியமும் மாறி மாறி அமையும். அந்த முறையிலேயே நாம் நம்முடைய தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றைப் பார்போமா னால், முதலில் சங்க இலக்கியமும், அதனையடுத்துச் சமய இலக்கியமும், அதற்குப் பின்னர் காப்பிய இலக்கியமும், அதற்குப் பின்னர் சிற்றிலக்கியமும், இறுதியாகப் புதுமை இலக்கியமும் தோன்றியிருப்பதைக்காணலாம். இதிலிருந்து காலத்திற்குக் காலம் தமிழ்க்கவிதையின் லடிவம்தேவையை ஒட்டி மாறி வந்திருப்பது நன்றாய்த் தெரிகிறது.

இவ்வாறு இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்க ளைச் 'சிற்றிலக்கியங்கள், என்றும் 'பிரபந்தங்கள்’ என்றும் கூறுவர். தமிழ்ப்பிரபந்தங்கள் தொண்ணுற்றாறு வகைப் படும். இந்தத்தொண்ணுற்றாறு வகைப் பிரபந்தங்களை யும் பற்றிய விரிவான பட்டியலைச் சதுரகராதியில் காண லாம் பிள்ளைத் தமிழைப் பிள்ளைக்கவியென வெண்பாப் பாட்டியலும், பிள்ளைப்பாட்டென பன்னிருபாட்டியலும் கூறுகின்றன. தமிழின் மிகப் பழமையான இலக்கணமா கிய தொல்காப்பியத்தில், 'குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்று ஒரு நூற்பா உள்ளது. இந்நூற்பாவினை ஆதார மாகக் கொண்டுதான் இப்பிள்ளைத்தமிழ் தோன்றியிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/121&oldid=1379526" இலிருந்து மீள்விக்கப்பட்டது