பக்கம்:கட்டுரை வளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைத்தமிழ்

123

 ஆகவே, பத்துப் பருவங்கள் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களாகும், ஒவ்வொரு பருவத்திலும் பத்துப்பாடல்கள் இடம்பெறப் பிள்ளைத்தமிழ் நூறு பாடல்களால் ஆகிய ஒரு பிரபந்த நூலாகும்

இனிப் பத்துப் பருவங்களின் அமைப்பினையும் சற்று விரிவாகக் காண்போம். முதலாவது பருவம் காப்புப் பருவமாகும். இது பாட்டுடைத் தலைவன் அல்லது காவிய நாயகனையோ அல்லது காவியநாயகியையோ காப்பாற்றி அருளும்படி தெய்வங்களை வேண்டுவதாகும். திருமால், சிவன், பிரமன், பிள்ளையார், முருகன், சூரியன், இந்திரன், குபேரன் இலட்சுமி, சரசுவதி, சந்திரன் முதலான தெய்வங்களைப் பாடி, அவர்கள் தம் காவியத் தலைவராகிய குழந்தையினைக் காக்க வேண்டுமென்று பாடுவர் காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலைக் காப்புப் பருவத்து முதற்கடவுளாகக் கொள்ளவேண்டும் என்ற வரையறை உண்டு.

அவன்றான்,

காவற் கிழவன் ஆக லானும் பூவின் கிழத்தியைப் புணர்த லானும் முடியும் கடகமும் மொய்ப்பூந் தாரும் குழையும் நூலும் குருமணிப் பூணும் அணியும் செம்மல் ஆக லானும் முன்னுற மொழிதற் குரியன் என்ப.”

-பன்னிரு பாட்டியல் : 24

என்று பன்னிரு பாட்டியல் பகர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/125&oldid=1382637" இலிருந்து மீள்விக்கப்பட்டது