பக்கம்:கட்டுரை வளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கட்டுரை வளம்


இப்படியிருந்தும், சில பிள்ளைத்தமிழ் நூல்களில், இந்த வரையறை (விதி) பின்பற்றப்படவில்லை இக்காப்புப் பருவம் குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியதாகும இரண்டாவது பருவம் செங்கீரைப் பருவமாகும். இது செம்மையான மொழிகளைப் பேசுமாறு குழந்தையை வேண்டுவதாகும். இது ஐந்தாம் திங்களில் பாடப் பெறுவதாகும். குழந்தை தன் தலையைத் தூக்கிக்கொண்டு, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, ஒரு காலை முட்டியிட்டுப் பூமியில் பதித்து, ஒரு காலைப் பின்னால் நீட்டிக்கொண்டு உடல் அசைந்து ஆடும் பருவத்தைச் செங்கீரைப்பருவம் என்பர். இதனைக் குமரகுருபரர்’

ஒருதாள் உந்தி எழுந்து இரு கையும் ::ஒருங்கு பதித்து நிமிர்ந்து

அருள்பொழி திருமுகம் அசைய அசைந்தினிது

ஆடுக செங்கீரை’

-முத்துக்குமாரசுவாமிப் பிள்ளைத்தமிழ் : 18

என்று முத்துக்குமாரசுவாமிப் பிள்ளைத் தமிழில் அழகாகப் பாடியுள்ளார்.

மூன்றாவது பருவம் தாலப்பருவமாகும். இது ஏழாம் மாதத்து நிகழ்வதாகும். ‘தால் என்பது நாக்கு; எனவே தாலப்பருவம் என்பது தாலாட்டுப் பருவமாகும்.

தாலாட்டென்பது ‘தால்’ என மருவி வழங்குகின்றது. குழந்தைகளைத் துயிலுறச் செய்வோர் நாக்கை அசைத்து ஒலி எழுப்பிப் பாட்டுப் பாடித் ‘தாலேலோ என்று சொல்லி முடித்துக் குழந்தையினைத் தூங்க வைப்பர்.

திவ்வியப்பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் இராமனையும், கண்ணனையும் குழந்தையாக எண்ணித் தாலாட்டுப் பாடுகின்றார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/126&oldid=1382641" இலிருந்து மீள்விக்கப்பட்டது