பக்கம்:கட்டுரை வளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைத்தமிழ்

125

 “மன்னுபுகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்!

செம்பொன்சேர் கன்னிநன்மா மதில் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே என்னுடைய இன்னமுதே! இராகவனே தாலேலோ!

-தாலாட்டு : 1

ஆழ்வார். தேவகியின் புலம்பலாகக் கண்ணனது குழந்தை விளையாட்டுகளைக் குறிப்பிட்டுள்ளார் :

“தண்ணந்தாமரைக்கண்ணனே கண்ணா!

தவழ்ந்தெ ழுந்து தளர்ந்தோர் நடையால்

மண்ணிற் செம்பொடி ஆடிவந்து என்றன்

மார்பில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ!

வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்

வாரிவாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில்

உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன்

என்னை என்செயப் பெற்றதெம் மோயே’

-தேவகி புலம்பல் : 6

நான்காவது பருவம் சப்பாணிப் பருவமாகும். இஃது ஒன்பதாம் மாதத்து நிகழ்வாகும். இது குழந்தையை இரு கைகளையும் சேர்த்து ஒசை எழக் கொட்டும்படி கேட்கும் பருவம் ஆகும். இப்படிக் கை கொட்டுவது சப்பாணி எனப்படும்.

ஐந்தாவது பருவமான ‘முத்தப் பருவம்’ பதினோராம் மாதத்து நிகழ்ச்சியினைக் கூறுகின்றது. இது “குழந்தையினை முத்தம் தருக” எனத் தாயாரும் பிறரும் வேண்டுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/127&oldid=1382651" இலிருந்து மீள்விக்கப்பட்டது