பக்கம்:கட்டுரை வளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைத்தமிழ்

127

 ஒன்பதாவது பருவம், சிறுபறை முழக்கலாகும், இது பத்தென்பதாம் மாதத்தில் பாடப்படுவதாகும் இது குழந்தையைத் தன் கையில் சிறு பறை’ என்னும் இசைக் கருவி கொண்டு முழக்குமாறு வேண்டுதலை உணர்த்தும் பருவமாகும்.

இறுதிப் பருவமான ‘சிறு தேர் உருட்டல் இருபத்தோராம் மாதத்து நிகழ்ச்சியை விளக்குவதாகும். இது குழந்தையை மரத்தால் ஆன சிறிய தேரினை உருட்டும்படி வேண்டும் பருவமாகும்.

பெண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதி மூன்று பருவங்கள் நீராடல், அம்மானை, ஊசல் என்பதை மேலே கண்டோம். நீராடல்’ என்பது பெண் குழந்தையை நீரில் குளிக்க அழைக்கும் பருவமாகும். ‘அம்மானை’ என்பது பெண் குழந்தையினைக் கழங்கினை மேலே வீசி ஆடும்படி வேண்டும் பருவமாகும். ஊசல் என்பது பெண் குழந்தையை ஊஞ்சலில் ஆடும்படி வேண்டுதலை அறிவிக்கும் பருவமாகும்.

இறுதியாகக் கூறப்பட்ட மூன்று பருவங்களும், பெண் குழந்தையின் மூன்றாம் ஆண்டிலும், ஐந்தாம் ஆண்டிலும், ஏழாம் ஆண்டிலும் கூட அமைத்துப் பாடப்படும் என்பது வெண்பாப்பாட்டியலால் தெரியவருகிறது. மேலும், ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப்பாடல்கள் பாடப்படும் என்பது மேலே குறிப்பிடப்பட்ட தன்றோ? இவ்வாறு பல பிள்ளைத் தமிழ் நூல்கள் அமைந்திருந்தாலும், ஒவ்வொரு பருவத்திற்கும ஏழு ஏழு பாடல்களையுடையதாகச் சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழும், ஐந்து ஐந்து பாடல்களையுடையதாகச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழும், மூன்று மூன்று பாடல்களையுடையதாகப் பழனிப்பிள்ளைத் தமிழும் எந்த வரையறையும் இன்றி ஆண்டாள் பிள்ளைத் தமிழும் அமைந்திருக்கின்றன. மேலும், ஆண்டாள் பிள்ளைத்தமிழில் பதினொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/129&oldid=1382665" இலிருந்து மீள்விக்கப்பட்டது