பக்கம்:கட்டுரை வளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைத்தமிழ்

129

 காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், பகழிக்கூத்தர் இயற்றிய திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ், அந்தக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், ‘மங்காத செந்நெல்வளர்’ செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா இயற்றிய திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்,’ மார்க்கசகாயதேவர் இயற்றிய, “திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், திருவாவடுதுறை ஆதினக் குருமூர்த்தி இயற்றிய சம்பந்தர்-அப்பர் பிள்ளைத்தமிழ்,’ என்பனவாகும். முகம்மதியக் கவிஞர்கள் “நபிநாயகப் பிள்ளைத்தமிழ்,’ “முகைதீன் பிள்ளைத்தமிழ்,’ “ஆண்டவர் பிள்ளைத்தமிழ்,’ என்னும் நூல்களும் இயற்றியுள்ளார்கள். இக்காலத்தில் கம்பன் பிள்ளைத்தமிழ், காந்தி பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களும் வெளிவந்துள்ளன.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களில் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்பனவும்; பெண்பாற்பிள்ளைத் தமிழ் நூல்களில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் என்பனவும் மிகவும் சிறப்பு வாய்ந்த பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிலே அமைந்துள்ள ‘தொடுக்கும் கடவுட் பழம்பாடற் றொடையின் பயனே’ என்ற பாடல், தெய்வத்தன்மை வாய்ந்த பாடலாகும். பழைய வேதப்பொருளின் வித்து என்றும், அகத்துறை புறத்துறை அமைந்த இனிய தமிழ் மொழியின் சுவை என்றும், ஆணவத்தினை அடியோடு கல்லியெறிந்து அடியார் தம் உளக்கோயிலில் ஏற்றி வைக்கும் திருவிளக்கு என்றும், வளர்கின்ற சிகரங்களையுடைய இமயமலையிலே விளையாடும் இளைய பெண் யானை என்றும், அவை கடலால் சூழப்பட்ட உலகத்தைக் கடந்த ஒருவனாம் ஒப்

க-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/131&oldid=1382680" இலிருந்து மீள்விக்கப்பட்டது