பக்கம்:கட்டுரை வளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளைத்தமிழ்

131

 முதிர், கனிவாய்ப் பசுந்தேறல் எனத்தொடங்கும் வருகைப் பருவப்பாடலும் சிறந்ததாகும். மீனேறு குண்ட கழி’ எனத் தொடங்கும் செங்கீரைப் பருவப்பாடல் வள்ளியம்மையின் ‘தேனூறு கிளவிக்கு வாயூறி நின்ற முருகனின் திறத்தைத் கூறுகின்றது.

கோலக் குமரன் ஞாலத்தில் கொலுவீற்றிருக்கும் இடங்களாக ஆறு இடங்களைக் கூறுதல் மரபு. இவற்றினை ‘அறு படை வீடுகள்’ என்பர். நக்கீரர் இயற்றிய சங்க நூலாம் திருமுருகாற்றுப் படையிலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இதனை நன்கு காணலாம். இம்மரபினைப் பின்பற்றியே பகழிக் கூத்தரும் ஆறுபடை வீடுகளையும் ஒரே பாடலில் அமைத்துப் பாடியுள்ளார். அவ்வழகிய பாடல் வருமாறு :

அறந்தருபுரந்தராதியருலகிலர கனி

ராடுமணி பூசல்சிற்றில் அம்மனை கழங்குபல செறியுங் தடஞ்சாரல்

அருவிபாய் பரங்கிரியுமுட் புறந்தரு புனிற்றுவெள் வளைகடற் றிரைதொறும்

பொருதசீ ரலைவாயுமென் போதுகமழ் திருவாவி னன்குடியு மரியமறை

புகலுமே ரகமுமினிமைக் குறந்தரு கொடிச்சியர் பெருங்குரவை முறைகுலவு

குன்றுதோ றாடலுங்தண் கொண்மூ முழங்குவது கண்டின மெனக்கரட

குஞ்சரம் பிளிறமரவஞ் சிறந்த பழ முதிர்சோலை மலையும் புரந்தகீ

சிறுபறை முழக்கி யருளே! செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே!

சிறுபறை முழக்கி யருளே!’

-திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ் :சிறு பறைப்பருவம், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/133&oldid=1382691" இலிருந்து மீள்விக்கப்பட்டது