பக்கம்:கட்டுரை வளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் பா நலம் 135.

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே-அதன் முத்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே”

-தேசிய கீதங்கள், வந்தே மாதரம் : 1.

என்று குறிப்பிட்ட கவிஞர்,

“பூரண ஞானம் பொலிந்தநன் னாடு

புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே

பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே’

-தேசிய கீதங்கள், எங்கள் நாடு : 2

என்று பாடிப் பரவசப்படுகிறார்.

பாரத நாட்டைப் பாடியது போன்றே தமிழ் நாட்டின், சிறப்பினையும் ‘செந்தமிழ் நாடு’ என்ற கவிதையில் தேனொழுகக் குறிப்பிடுகின்றார். செந்தமிழ் நாடு என்ற சொற்றொடர் அவர் செவிகளைக் குளிர வைக்கின்றது. தந்தையர் நாடு என்ற சொற்றொடர், அவர் உணர்ச் சியைக் கிளறி வேகமூட்டுகின்றது. செயற்படக் கவிதை யாய் அமைகின்றது.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே!-எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!”

- தேசிய கீதங்கள், செந்தமிழ்நாடு : ! என்கிறார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/137&oldid=1382165" இலிருந்து மீள்விக்கப்பட்டது