பக்கம்:கட்டுரை வளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 கட்டுரை வளம்

‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்,

நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்! “

-தெய்வப் பாடல்கள், ஐய பேரிகை : 2

இது போன்று இந்திய நாட்டினர் அனைவரும் ஒருமைப்பாட்டு உணர்வோடு ஒன்றிய சிந்தையினராய் வாழ வேண்டும் என்பதனைப் பெரிதும் வற்புறுத்துகிறார் பாரதியார். எங்கள் தாய்’ என்ற கவிதையில்,

‘முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற வொன்றுடையாள்-இவள்

செப்பு மொழி பதினெட்டுடை யாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்”

-தேசிய கீதங்கள், எங்கள் தாய் : 3

என்று குறிப்பிட்டுள்ளார். ‘வாழ்ந்தால் முப்பது கோடி மக்களும் ஒரு நிறையாய் வாழ வேண்டும்; இன்றேல், ஒருங்கே மடிய வேண்டும்!” என்று ஆவேசத்தோடு பேசு கிறார் பாரதியார் :

“எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்;

முப்பது கோடியும் வாழ்வோம்-விழில்

முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம் !”

-தேசிய கீதங்கள் பாரத நாடு : 5

வடகோடி மக்களும் தென்கோடி மக்களும் இணைந்து

மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதனை அழகியதொரு கற் பனைக் காட்சியாய்க் கவினுற வடித்துக் காட்டுன்றார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/140&oldid=1382175" இலிருந்து மீள்விக்கப்பட்டது