பக்கம்:கட்டுரை வளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 கட்டுரை வளம்

முத்தெடுத்து, அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரந்தொழில் செய்வோர்க்கே பெருமை! அவர்களே புதிய பாரதத்தின படைப்புக் கடவுளர்கள் (பிரம்மாக்கள்) என்கிறார்.

பாரதியார் தேசபக்திக் கவிதைகளை மட்டுமன்றித் தெய்வபத்திப் பாடல்களையும் பாடியுள்ளார். எத்தனை கோடி இன்பம் வைத்தாய்! எங்கள் இறைவா! இறைவா! இறைவா?’ என்று எல்லை கடந்து பேரருட் பிழம்பாய் நிற்கும் இறைவனின் படைப்பு மேன்மையினைப் பாடி நிற்கிறார். பாரதியாருக்கு அன்னை பராசக்தியிடம் அள விலா அன்புண்டு. எனவே, தம் மனந்து வேட்கையினை அழகிய மாடலொண்றிலே அற்புதமாய் வடித்துக் காட்டு கின்றார் “காணி நிலம் வேண்டுமாம்; அந்தக் காணி நிலத்தில் அழகிய துரண்களும் துய்ய நிறம் கொண்ட நல்ல மாடங்களும் நிறைந்துள்ள மாளிகை கட்டித்தர வேண்டு மாம். மாளிகைக்கு அருகில் ஒரு கிணறு இருக்க வேண்டுமாம்; அந்தக் கிணற்றங்கறையினிலே கீற்றும் இள நீரும் நிறைந்த பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் வேண்டுமாம்; மாளிகையின் முற்றத்தில் தென்னங்கீற்றின் ஊடே வெண்முத்துச் சுடர்போன்ற நிலவொளி முன் புவர வேண்டுமாம்; அங்கு இன்னிசைத் தீம்பண் இசைக்கும் கோலக்குயிலின் (கீத இசை கேட்க வேண்டுமாம்; மனம் மலர்ச்சி பெற்று மகிழ இளந் தென்றல் தவழ்த்து தழுவ வேண்டுமாம்; பாட்டுக்கலந்திட ஒரு பத்தினிப்பெண்மனையாள் - வேண்டுமாம்; அக் கூட்டு இன் பத்திலே கவிதைகள் பிறக்க வேண்டுமாம். அந்தக் காட்டு வெளி யினிலே அன்னை பராசக்தியின் அருட்க்காவல் துலங்க வேண்டுமாம்; பாட்டுத்திறத்தாலே வையத்தைப் பாலித் திட வேண்டுமாம்-இதுவே பார் தியார் அன்னை பராசக்தி யிடம் வேண்டும் அருள் வரம்.

“எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குபவன் இறைவன்” என்ற தத்துவத்தை, நந்தலாலா பாட்டிலே பாரதியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/144&oldid=1382207" இலிருந்து மீள்விக்கப்பட்டது