பக்கம்:கட்டுரை வளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் பாநலம் 143.

பாடுகிறார். காக்கைச் சிறகின் கருமையிலும், பார்க்கும் மரங்களின் பசுமையிலும் கேட்கும் ஒலியின் கீதத்திலும், தீக்குள் விரலைவைத்துத் தீண்டும் இன்பத் திலும் கண்ணனே நிறைந்துள்ளான். காயில் புளிப்பதும், கனியில் இனிப்பதும், நோயில் படுப்பதும், நோன் பில் உயிர்ப்பதும், காற்றில் குளிர்வதும், கனலில் சுடுவதும், கண்ணபெருமானின் திருவருட் செயல்களே. இவ்வாறு பாரதியார் உயர்ந்த தத்துவத்தினை நந்தலாலா பாட்டி லும், கண்ண பெருமானே’ பாட்டிலும், பொதிந்து வைத்துள்ளார்.

பாரதியாரின் முப்பெரும் பாடல்கள் ஒர் உயர்ந்த அரிய கற்பனையாகும். உணர்ச்சி (Emotion), கற்பனை (Imagination), வடிவம்(Form),கருத்து (Content), ஆகிய நான்கும் சிறந்த கவிதையின் இன்றியமையாத பண்புகள் என்பார் வின்செஸ்டர், (Winchester). இக் கருத்திற்கு விளக்கமாய் அரண் செய்து நிற்பன கண்ணன் பாடல்கள். கண்ணனைத் தோழனாய், தாயாய், தந்தையாய், சேவக னாய், அரசனாய் , சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், விளையாட்டுப் பிள்ளையாய், காதலியாய், ஆண்டானாய் குல தெய்வமாய் எண்ணிப் பாரதியார் பாடியுள்ள பாடல் களில் கவிதைப்பண்புகள் நிறைந்துள்ளன. உலகின் சிறந்த கவிதைப் படைப்புகளோடு ஒருங்கே வைத்து எண்ணத் தகும் சிறப்புடையன என்று உறுதியாகப் போற்றலாம்.

“பாஞ்சாலிசபதம் ஒர் உணர்ச்சிக்காவியம் பழைய கதை புதிய வடிவில் புதுமை எண்ணங்களைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பாரதத்தாய் அடிமைப்பட்ட நிலை யினைக் குறிப்பாக உணர்த்துவது; கட்டுண்டோம். பொறுத்திருப்போம். காலம் மாறும் என்ற உள்ளிட்டைப்

பற்றி நிற்கும் தீஞ்சுவைச் சிறு காவியம் இது.

‘முன்னிக் கவிதை வெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாலர்க்குத் தோன்றுவதாய் நெட்டைக் கனவின்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/145&oldid=1382219" இலிருந்து மீள்விக்கப்பட்டது