பக்கம்:கட்டுரை வளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கட்டுரை வளம்

 இருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், அவை புற மெனவே படும் என்றார்.’’

காம நிகழ்ச்சியின் கண் ஒத்த அன்பினராய்க் கூடுதற்கமைந்த தலைமகனும் தலைமகளும் ஆகிய இருவர் மாட்டும் குடிப்பிறப்பு, அதற்குத்தக்க நல்லொழுக்க நிறை, ஆள்வினையுடைமை, பருவம், வடிவம், வடிவ வனப்புக் கொண்டு எழும் காதல், உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் பண்பு, எல்லா உயிர்கள் மாட்டும் அன்புடையராதல், அறிவு, எக்காலத்தும் திருத்தகவிற்றாகிய உள்ளம் உடைமை ஆகிய இப்பத்துப் பண்புகளும் ஒத்திருத்தல் வேண்டும்' என்பர் தொல்காப்பியனார். இதனை அவர் மெய்ப்பாட்டியலில், கீழ்க்கானும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளங்த ஒப்பினது வகையே

- தொல். மெய்ப்பாட்டியல்: 25

அடுத்து, தொல்காப்பியனார் அகத்தினையியலில் ‘முதல், கரு, உரிப்பொருள்கள்’ என மூன்று பொருள்களை வைத்துள்ளார் ‘காட்சிப் பொருள், கருத்துப் பொருள்’ என்னும் இரண்டும் இதில் அடங்கும். நிலமும் காலமும் உயிர் வாழ்க்கைக்கு உறுதுணை செய்வன; அவை முதற் பொருள்எனப்பட்டன. நிலம் நான்காகப் பகுக்கப்பட்டது. ‘காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை’ என்றும், மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி’ என்றும், ‘வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம்’ என்றும் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல்” என்றும் குறிப்பிடப்பெற்றன. இவை “நானிலம்’ என வழங்கப்பட்டன. வளங்குறைந்த பகுதி ‘பாலை” எனப்பட்டது. இதனைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/20&oldid=1254724" இலிருந்து மீள்விக்கப்பட்டது