பக்கம்:கட்டுரை வளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கட்டுரை வளம்


அடுத்து, நிலமும் காலமுமாகிய முதற்பொருள்களின் சார்பினால் உண்டாகும் புல் முதல் மக்கள் ஈறாக உள்ள உயிர்ப்பொருள்களும், உயிரில் பொருள்களும் கருப்பொருள்கள் என வழங்கப்படும். இதனைத் தொல் காப்பியனார்,

“தெய்வம் உணாவே மாமரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப"

-தொல். அகத்திணையியல் : 18
என்று குறிப்பிட்டுள்ளார்.

‘உரிப் பொருள்” என்பது, அவ்வந்நிலத்திற்குரிய ஒழுக்கமாகும், முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும், குறிஞ்சிக்குக் கூடலும் கூடல் நிமித்தமும், பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும், மருதத்திற்கு ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தலுக்கு இரங்கலும் இரங்கல் நிமித்தமும் திணை ஒழுக்கங்களாக - ஒழுகலாறுகளாகக் கூறப்படும். இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம பற்றியன வள் த லாலும், மகளிர் கற்பொழுக்கத்தொடு பொருந்திக் கணவன் சொற் பிழையாது இல்லிலிருந்து நல்லறஞ் செய்தலே முல்லையாதலாலும், முல்லைத்திணை முதற் கண் கிளத்தப்பட்டது. புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின், குறிஞ்சி அதன் பின்னர் வைக்கப்பட்டது. புணர்ச்சிக்குப் _ பின்னர் ஊடல் நிகழ்தலின் மருதம் பின்னதாயிற்று. மருதத்திற்குரிய பரத்தையிற்பிரிவு போலப் பிரிவின் கண் நிகழ்வது இரங்கலாகிய நெய்தலாதலின் நெய்தலை இறுதியில் பின்வருமாறு வைத்துள்ளார் தொல்காப்பியனார் :

'மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேங் தன் மேய தீம்புனல் உலகமும்
 
வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும்
படுமே

-தொல். அகத்திணையியல் : 5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/22&oldid=1256254" இலிருந்து மீள்விக்கப்பட்டது