பக்கம்:கட்டுரை வளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியனார் தந்த பொருளதிகாரம் 29

டார், பிற்காலத்தில் தண்டியாசிரியர் வழியொற்றி அணிகள் பலவற்றைத் தமிழில் படைத்துக் கொண்டனர். உவமை பிறக்கும் நிலைக்களத்தை,

“வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்’

-தொல். உவமவியல் : 1

என்று தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார் உவமை யாவது, ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளை ஒப்புமை கூறி, அதன் வழி அப்பொருளை விளக்குவதாகும். ஒருவன் அறியாத பொருளை அவனுக்கு அறிவுறுத்த அவன் அறிந்த பொருள் கொண்டு ஒப்புமை காட்டி அறிவுறுத்த வேண்டும்.

செய்யுளியலில் செய்யுள்களின் இலக்கணம் கூறப் பட்டுள்ளது. செய்யுள்’ எனப்படுவது, அகப்பொருள் : புறப்பொருள் ஆகிய இரண்டனுள் ஒரு பொருள்மேல் அணி, ஒசை முதலிய நலன்கள் அமையச் சொற்களால் இயற்றப் பெறுவதாகும். ஒரு செய்யுளில் மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை, முரண் முதலியன அமைந்திருக்கும். தனிநிலைச் செய்யுள் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, மருட்பா, பரிபாடல் என அறு வகைப்படும்.

தொல்காப்பியத்தின் இறுதி இயல் மரபியலாகும். ‘மரபு’ என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை, அவர்கள் வழங்கிய முறையின் படியே கூறுதல் ஆகும். உயர்திணை ஆண், பெண், மக்கள், குழந்தை, உயிரினக் குழவி, மரஞ்செடி கொடி இவற்றின் தழைகள் முதலியவற்றை இன்னின்ன மொழிகளால் உணர்த்த வேண்டும் என்ற முறையினை மரபியல் சுட்டு கின்றது. மேலும் ஆறறிவு உயிர்களையும் பின் வருமாறு தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/25&oldid=1371267" இலிருந்து மீள்விக்கப்பட்டது