பக்கம்:கட்டுரை வளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சங்க கால மகளிர்

சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற் காலமாகும். பழந்தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களனாய் இருந்தவை சங்க கால மகளிரின் அரும்பெரும் பண்புகளே. பெண்களே வாழ்வின் கண்கள் எனலாம். பெண் இன்றேல் ஆணில்லை. ஆணின்றேல் பெண் இல்லை என்றபடி, ஆணும் பெண்ணும் இணைந்து இல்லற நெறிப்படுகின்ற வாழ்வே முழுமையான வாழ்வு எனக் கொள்ளப்பட்டது. இதனை மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து’ என்பர் நம்பியகப் பொருள் ஆசிரியர். இது குறித்தே, மனைக்கு விளக்கம் மடவார்; மடவார் தமக்குத் தகைசால் புதல்வர்” என்ற மொழியும் எழுந்தது; உமையொரு பாகனாய்ச் சிவபெருமான் கொலு வீற்றிருப்பதும் தமிழர் தம் வாழ்வின் தத்துவத்தினை நன்கு விளக்கும்.

“மாதர் காதல்’ என்றார் தொல்காப்பியனார். மேலும் அவர் பெண்ணிற்குப் பின்வரும் பண்புகள் இன்றியமை யாதன என்றும் குறிப்பிட்டார்.

‘உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று’

-தொல். களவியல்: 23

என்று கூறுவதினின்றும், மகளிர்க்கு உயிரைக் காட்டிலும் நாணம் சிறந்தது, அந்த நாணத்தைக் காட்டிலும் கற்பு நனி சிறந்தது என்பது புலனாகின்றதன்றோ! பிறிதோரி டத்தில், ஆண்களுக்குப் பெருமையும் உரனும் வேண்டப் படுவன’ என்று குறிப்பிட்ட தொல்காப்பியனார், பெண் களுக்கு,

‘அச்சமும் நானும் மடனுமுந் துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” -

- தொல். களவியல் : அ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/27&oldid=1371288" இலிருந்து மீள்விக்கப்பட்டது