பக்கம்:கட்டுரை வளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 கட்டுரை வளம்

என்றார். இதன்வழி, அச்சம், நாணம், மடம் என்பன மகளிர் க்குரிய பண்புகளென்பது தெரிகின்றது. மகளிர்தம் மனத்தில் குறிப்பின்றித் தோன்றும் நடுக்கம், அச்சம் என்று கூறப்படும். பெண் தன்மையோடு பொருந்தாத புறச்செயல்களில் ஒழுகாது ஒதுங்கி வாழ்தலே நாணம் எனப்பட்டது. இவ்வுலகினையும் இதில் தோற்றங் கொண்டுள்ள பொருள்களின் இயல்பினையும் பிறர் தமக்கு அறிவிக்க, அதனை அறிந்துணர்ந்து, பின்னர் அவ்வாறு அறிவால் மேற்கொண்ட கொள்கையினைச் சிறிதும் நெகிழவிடாது போற்றுதல் மடன் என்று கூறப் படும். இவ்வாறு பெண்கள் ஆடவர் அவாவுறும் நற்குண நற்செய்கைகளில் மேமபட்டிருக்க வேண்டும்! ஆடவர், மகளிர் பால் குடிகொண்டிருக்க வேண்டும் என்று விரும்பிப் போற்றும் பண்புகளைத் தொல்காப்பியர்,

“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான”

-தொல். பொருளியல் : 1.3

என்று பாராட்டுவர். இதற்கு விளக்கம் கூறவந்த உரை யாசிரியர் இளம்பூரணர், செறிவு என்பது அடக்கம்: நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங் கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் அறிதல்; அருமை என்பது உள்ளக்கருத்து அறிதலருமை’ என்று, தம் நுண்மாண் நுழைபுலம் விளங்கும் வண்ணம் உரை விளக்கம் தந்துள்ளார்.

கண்ணிறைந்த பேரழகுகொண்டு ஆடவர் உளங் கவர்ந்து நிறையும் நங்கை ‘காரிகை எனப்பட்டாள். இது பற்றியே மணிமேகலையாசிரியர் சீத்தலைச் சாத்தனார்’ தம் காவியத்தலைவி மணிமேகலையைச் சுதமதி வாயி

லாகப் பின்வருமாறு அறிமுகப்படுத்தியுள்ளார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/28&oldid=1371295" இலிருந்து மீள்விக்கப்பட்டது