பக்கம்:கட்டுரை வளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 29.

பெயர்கள் வருமாறு; அஞ்சியத்தை மகள் நாகையார், அள்ளுர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஊட்டியார், ஊண்பித்தையார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், காக்கைபாடினியார், நச்செள்னையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி யார், நக்கண்ணையார் , நெடடிமையார், நெடும் பல்லி யத்தை, பாரி மகளிர் பூங்கணுத்திரையார், பூதப்பாண்டி யன் தேவி, பெருங்கோப்பெண்டு, பேய்மகள் இளவெயினி, பொத்தியார், போந்தைப்பசலையக்ர், மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெள்ளிவீதியார் வெறிபாடிய காமக் கண்ணியார் முதலியோர் அக்காலப் புலமை பெல்லியலாரிற் சிலராவர், இவர்களில் அரசனுக்கே அறவுரை கூறித் திருத்திய ஒளவையார் போன்ற பெண் பாற்புலவர்களை மறக்கவும் ஒல்லுமோ? ‘காக்கை பாடினி யம், சிறுகாக்கை பாடினியம்’ என்னும் இரண்டு யாப்பிலக் கண நூல்கள் காக்கை பாடினியார் என்னும் பெண் பாற் புலவரால் இயற்றப்பெற்றனவாக அறியும்போது, மகளிர் தம் கல்வியின் மாண்பு தெற்றெனப் புலனாகின்றது.

ஆடவரினும் பெண்டிரே இசைப்பயிற்சி மிக்கிருந் தனர். அவர்கள் குரல் இயற்கையாகவே இனிமை நிரம்பி யிருந்தது. எனவே இசைத்தமிழ், மகளிர் வழிப் பெரிதும் வளர்ந்தது. தாலாட்டுப் பாடல் தாய்மார் வளர்த்த இய லிசைத் தமிழ் இலக்கியம் அன்றோ? யானை முதலிய காட்டு விலங்குகளும் மறவர்களும் அவர்தம் இசைக்கு வயப்பட்டுத் தம் கொடுரத்தன்மை மறந்து நின்றமையைச் சங்க இலக்கியங்கள் நமக்கு நன்கு புலப்படுத்துவனவாம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை’

எனப் பொருநராற்றுப்படை (21, 22) குறிப்பிடுகின் றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/31&oldid=1371405" இலிருந்து மீள்விக்கப்பட்டது