பக்கம்:கட்டுரை வளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 33

உரையினி மாதரா யுண்கண் சிவப்பப் புரைநீர் புனல் குடைந் தாடினோம்’

-சிலம்பு, குன்றக்குரவை 7 : 1-2 மேலும்,

‘வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர்

துணங்கை நாளும் வந்தன.”

என்ற பாடற்குறிப்பு, மகளிர் நிகழ்த்திய துணங்கைக் கூத்தினைக் குறிப்பிடும். அந்நாளில் ஆடவர் விளை யாடாமல் மகளிர் மட்டுமே விளையாடும் விளையாட்டு மகளிர் பூப்பந்தாகும். தங்கள் காற்சிலம்பு கலீர் கலீர்’ என ஒலிக்க, அவர்கள் பந்தாடிப் பின்னர் முன்றிலின் மணற்பரப்பிலேயிருந்து தங்கள் வளையல்கள் கலகல”

வென்று ஒலி செய்யக் கழற்காய் விளையாட்டு ஆடுவார்கள்.

  • தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை

வான்றோய் மாடத்து வரிப்பங் தசை இக் கைபுனை குறிந்தொடி தத்தப் பைபய முத்த வார்மணற் பொற்கழங் காடும்’

-பெரும்பாணாற்றுப்படை, 332-339

தைந்நீராடல்’ என்ற நோன்பினை மணமாகாத மகளிர் நோற்றனர். வைகறையில் நீராடி இறைவனைப் பாடித் தொழுது பரிசாக நல்ல கணவனை வேண்டுகின்றனர் :

வையெயிற் றவர்காப்பண் வகையணிப் பொலிந்துநீ தையில் நீராடிய தவங்தலைப் படுவாயோ’

-கலித்தொகை 59: 12-13

இதனால், திருமணத்திற்கு முன்னர், ம க ளி ர்,

உடலுக்கு உறுதி தந்து, உள்ளத்திற்கு உவகை ஊட்டி,

வாழ்வற்குப் பயிற்சி நல்கும் நல்ல விளையாட்டுகளையே தேர்ந்தெடுத்து விளையாடினர் என்பது போதரும்.

க.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/35&oldid=1371445" இலிருந்து மீள்விக்கப்பட்டது