பக்கம்:கட்டுரை வளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 கட்டுரை வளம்

பருவ வயது வந்து ற்ற பெண்கள் தங்கட்கேற்ற காளைகள் பால் காதல் கொண்டார்கள். அக் கால ஆட வனுக்கு வீரமே வாழ்வாக விளங்கியது. பொன் முடியார்’ என்ற பெண்பாற் புலவர், வயது நிறைந்த இளைஞன் ஒருவனைக் குறிப்பிடுகின்ற பொழுது,

ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”

- புறநானுாறு, 312 ; 5-6 என்று கூறியுள்ளார். மேலும், முல்லைநில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப் பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் அஞ்சாநெஞ்சமும் ஆற்றலுமுடைய காளை யரையே மணக்க விரும்பினர். இதனை,

‘கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்

புல் லாளே ஆய மகள்”

-கலித்தொகை, 103 : 63-64

என்று, ‘முல்லைக்கலி அழகுறக் குறிக்கின்றது. இந் நாளைப் போல் அல்லாமல், அக்காலத்தே மகளிரை மணந்து கொள்ள ஆடவரே மகளிர்தம் அணிகலன்களுக் கெனப் பெரும் பொருளினைப் பரிசமாகத் தந்தார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்து போற்றுகின்றோம். ஆனால், அதற்காகத் தகுதியில்லாதவன் ஒருவன் பெரும் பரிசுப் பொருளைக் கொணர்ந்து தந்தாலும் தங்கள் மகளைப் பழந்தமிழ்ப் பெருமக்கள் மணஞ்செய்து கொடுத்தார்களில்லை. இதற்குப் பின்வரும் புறநானூற்றுப் பகுதி சான்று கூறும் :

  • முழங்குகடன் முழவின் முசிறி யன்ன

கலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரையர் அல்லோர் வரையலள் இவளெனத் தந்தையும் கொடாஅன்’

-புறநானுாறு : 343 :10-13 சங்ககால மகளிர் இறை நம்பிக்கையுடையவர்கள். மணமாகாத மகளிர், முருகனை நோக்கி, ‘யாம் எம் நெஞ்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/36&oldid=1371453" இலிருந்து மீள்விக்கப்பட்டது