பக்கம்:கட்டுரை வளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 35

மர்ந்த காதலரைக் கனவிற் கூடியுள்ளோம். அது பொய் யாகாமல் நனவின் கண்ணும் எம் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும், என இறைஞ்சுகின்றனர். மணமான மகளிரோ, தமக்கு நல்ல பிள்ளைகள் பிறக்க வேண்டுமென நோற்கின்றனர்; மேலும் தம் கணவர் மேற்கொண்ட செயல்கள் செம்மை பெறவும், போரில் வெற்றி வந்தெய் தவும் வரமருள வேண்டும் என்றும் திருமுருகனை ஒருமன மாக இறைஞ்சி நிற்கின்றனர். திருப்பரங்குன்றத்திலே நடை பெறும் வழிபாடு இது :

அருவரைச் சேரத் தொழுநர் கனவிற் றொட்டது கைபிழை யாகாது நனவிற் சேஎப்பநின் னளிபுனல் வையை வருபுன லணிகென வரங்கொள் வோரும் கருவயி றுறுகெனக் கடம்படு வோரும் செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும் ஐயம ரடுகென வருச்சிப் போரும்’

-பரிபாடல் 8 , 102-108

பத்துப்பாட்டுள் ஒன்றான ‘மதுரைக்காஞ்சி கொண்டு சிவபெருமான், மாயோன், முருகன் முதலிய தெய்வங்களை மகளிர் வழிபட்ட செய்தியை அறியலாம். தாமரைப் பூவினைக் கையிலே பிடித்தாற்போலத் தாம் பெற்றெடுத்த அருமைக் குழந்தைகளைக் கையினால் தழுவியெடுத்துக் கொண்டு, தம் கணவருடன் பூசைக்குரிய பூவினையும் நறும் புகையினையும் எடுத்துக்கொண்டு, திருக்கோயிலுச் குச் சென்று தெய்வத்தை வழிபாடியற்றி நின்றனர்.

  • திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை

ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தமேரைப்போது பிடித் தாங்குத் தாமும் அவரும் ஒராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்துபுறங் காக்கும் கடவுட் பள்ளியும்

-மதுரைக்காஞ்சி, 461-467

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/37&oldid=1371464" இலிருந்து மீள்விக்கப்பட்டது