பக்கம்:கட்டுரை வளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 கட்டுரை வளம்

நல்ல பண்புடைய பெண் மக்களைப் பெற வேண்டும் என்று கேட்டு இறைவன் திருவருளை இறைஞ்சுகின்றனர் என்பதனால் பெண்மக்கட் பேற்றின் சிறப்புப் புலனாகும். இதனை,

“குன்றக் குறவன் கடவுட் பேணி

இரங்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்’

- ஐங்குறுநூறு 257: 1-2 என்னும் கபிலர் வாக்கால் உணரலாம். நல்ல ஒழுக்கம் நிறைந்த பெண் வைகறையில் துயிலுணர்ந்து த்ன் கண வனைத் தொழுதெழுந்தாள் என்று திருவள்ளுவர் குறிப் பிடுவார் :

“தெய்வங் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”

-திருக்குறள், 55 ‘தன்னால் விரும்பப்பட்ட தலைவனையே தனக்கு வாழ்க்கைத் துணைவனாக அளிக்க வேண்டும்’ என்று தன் குலமுதற் - கடவுளாம் குமரனை நன்னிரும் நறுமலரும் கொண்டு இறைஞ்சுகின்றாள் மலைவாழ்மங்கையொருத்தி.

“குன்றக் குறவன் கரதன் மடமகள்

மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுள் குல முதல் வழுத்தி’

- ஐங்குறுநூறு, 259 : 1-3 என்பது அப்பாடல்.

இத்தகைய நல்ல பண்புகள் நிறைந்த தலைவி, தலை வன் பெற்ற பேறுகளில் தலைசிறந்த பேறாவள். இது குறித்தே வள்ளுவரும்,

இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?:

-திருக்குறள்; 53 என்று குறிப்பிட்டார். துரங்கலோரி’ என்ற சங்க காலப் புலவரும் ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் உணவையுடைய செல்வச்சிறப்பில்லாத இல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/38&oldid=1371471" இலிருந்து மீள்விக்கப்பட்டது