பக்கம்:கட்டுரை வளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 37

வாழ்க்கை, அழகையுடைய இளைய தலைவி வாழ்க்கைப் பட்டுப் புக்கனளாக, இப்பொழுது விழாவையுடையதா யிற்று என்று பாடுகின்றார் :

“ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை

பெநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னுமிவ் ஆரே’

-குறுந்தொகை, 295 : 4-6

அறிவாலும், பண்பாலுல், வயதாலும், குடிப்பிறப்பு செல்வம் முதலியவற்றாலும் ஒத்த தலைமகனும் தலைமக ளும், நல்லுாழின் வழிப்பட்டுப் பிறர் கொடுக்கவும் அடுப் பவும் இன்றித் தாமே தமியராய்க் கூடுகின்யனர். அக்கூட் டத்திற்குப் பின்னர்த் தலைமகன் பிரிந்து சென்று விடு வானோ என்று தனக்கே இயல்பாகவுடைய அச்சங் கொண்டு கலங்குகின்றாள் தலைமகள். அதுபொழுது தலைவன் அவளைப் பின் வருமாறு தெளிவிக்கின்றான் : ‘'என் தாயும் உன் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகு உற வினர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினராவார்? இப்பொழுது பிரிவற்றிருக்கும் நீயும் நானும் முன்பு எவ்வாறு அறிவோம்? இப்பொழுதோ வெனில், செம்மண் நிலத்திலே பெய்த மழை நீர் அம்மண் னோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல் அன் புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன என்று கூறுகின்றான். இவ்வழகிய கருத்தினை உள்ளடக்கிநிற்கும் அவ்வருமைப் பாடல் வருமாறு :

‘யாயும் ஞாயும் யாரா கியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி யறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சங் தாங்கலங் தனவே”

-குறுந்தொகை, 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/39&oldid=1371476" இலிருந்து மீள்விக்கப்பட்டது