பக்கம்:கட்டுரை வளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 39

சென்றவுடன்தான் தாய்க்கு அவள் காதல் நெஞ்சம் புலனா கின்றது. பாலையும் உண்ணாளாகி, பந்தையும் விரும் பாளாகி, முன்னர்த் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி, இப்பொழுது வேனிலால் கரிந்த மலைப் பகுதியில் எவ்வாறு எளிதென. உணர்நது சென்றாளோ? எனக் கலக்கத்தோடு வியக்கின்றாள் :

‘பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்

விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை ஒமை குத்திய வுயர்கோட் டொருத்தல் வேனிற் குன்றத்து வெவ்வறைக் கவாஅன் மழை முழங்கு கடுங்குர லோர்க்கும் கழைதிரங்கு ஆரிடை அவனொடு செலவே’

- குறுந்தொகை, 396

இவ்வாறு காதலன் பின் சென்ற தலைவியைச் செவிலித்

தாய் பின் தேடிச்செல்லும் பொழுது, வழியில் எதிர்ப்பட்ட முக்கோற் பகவரை-தவம் செய் அறவோரை-வினmவு கின்றாள். அதற்கு மறுமொழியாக, அச்சான்றோர், ‘மலையிடைப் பிறந்த சந்தனமும், கடலிடைப் பிறந்த முத்தும், யாழிடைப் பிறந்த இசையும் முறையே பூசு வோருக்கும் அணிவோருக்கும், கேட்போருக்குமே இன்பம் பயக்குமே அல்லாது, தாம் பிறந்தவிடத்திற்குப் பயன் தரா. அதேபோல் உன் மகளும் உனக்குப் பயனின்றிச் சிறந்த தலைவனைத் தேர்ந்து தெளிந்து அவன் பின்னே சென்றாள்; அதுவே அவட்குரிய சிறப்பாகும்; இம்மைக் கேற்ற அறமும் அஃதே’ என்று அறிவுரை புகன்றனர். இவ்வழகிய பகுதி கற்றார் ஏத்தும் கலித்தொகை"யில் (9 :22-24) வருகின்றது:

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்

சிறந்தானை வழிபடீ இச் சென்றனள்;

அறந்தலைப் பிரியா வாறு மற் றதுவே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/41&oldid=1371495" இலிருந்து மீள்விக்கப்பட்டது