பக்கம்:கட்டுரை வளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 கட்டுரை வளம்

பாடலொன்றால் அறியும் பொழுது, அக்கால மகளிரின் பண்பு கண்டு பாராட்டவும் செயலிழந்து நிற்கிறோம் :

‘பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பில் சுற்றும் பூங்தலைச் சிறுகோல் உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிகரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரீஇமெலிங் தொழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்குஞ் சிறுவினை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்? கொண்ட கொழுநன் குடிவறள் உற்றெனக் கொடுத்த தங்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையனே’

-நற்றிணை 110

இது போன்ற பிறளொரு தலைவி, தன் தாய் வீட்டுத் தோட்டத்திலுள்ள தேன் கலந்த பாலைக்காட்டினும், தலைவன் நாட்டிலுள்ள தழையையுடைய கிணற்றின் அடியிலுள்ள மான் முதலிய விலங்குகள் உண்டு எஞ்சிய கலங்கல் நீரே இனியது என்று துணிகின்றாள் :

“அன்னாய் வாழிவேண் டன்னை நம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு உவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலிழி நீரே’

-ஐங்குறுநூறு 203

தொல்காப்பியனார் மகளிர்க்கு இன்றியமையாது இருக்க வேண்டிய பண்புகளாகப் பின் வருவனவற்றைக்

கற்பியலில் குறிப்பிடுகின்றார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/44&oldid=1371513" இலிருந்து மீள்விக்கப்பட்டது