பக்கம்:கட்டுரை வளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 43

‘கற்பும் காமமும் கற்பால் ஒழுக்கமும்

மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறங் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்’

-தொல், கற்பியல், 11

தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்,

“பெண்ணிற் பெருங்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்?”

-திருக்குறள் : 54 என்றார். கொண்ட கொழுநன் கற்பித்த நெறியிலே நிற் றல் கற்பெனப்படும். எனவேதான் தொல்லாசிரியராம் தொல் காப்பியனார்.

‘உயிரினும் சிறந்ததன்று நாணே, நாணினும்

செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறத்தன்று’

-தொல், களவியல் : 22

என்று குறிப்பிட்டுள்னார். ‘கடவுள் சான்ற கற்பு, வட மீன் புரையுங் கற்பு. வறனோடும் வையத்து வான் தரும் கற்பு’ என்னும் சங்க இலக்கியங்கள் கற்பின் மேம்பாடு பற்றிக் கூறுகின்றன. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவ டிகள், கவுந்தியடிகள் வாயிலாகக் கண்ணகியைப் பாராட் டும் பொழுது, தன் துன்பக்திற்காக வருந்தாமல் கணவன் துயர் குறித்தே வருந்தினாள்’ என்றும், கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம் கண்ணகி போலப் பிறரைக் காண வியலாது,’ என்றும் குறிப்பிட்டுள்ளார் :

“என்னொடு போந்த இளங்கொடி கங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்குதுய ரெய்தி காப்புலர வாடித் தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/45&oldid=1371515" இலிருந்து மீள்விக்கப்பட்டது