பக்கம்:கட்டுரை வளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று சீதை வருந்துவதனின்றும் விருந்தோம்பலின் சிறப்புத் தெரியவருகின்றது. இத்தகு சிறப்புமிகுந்த விருந் தோம் பலினை ச் செறிந்த நள்ளிரவிலும் விரும்பி மேற் கொள்ளும் நங்கையை,

‘அல்லில் ஆபினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின்

மெல்லியல் குறுமகள்’ என்று நற்றிணை (9:12) பாராட்டுகின்றது.

“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’

-திருக்குறள்,247

‘இல்லோர் லாழ்க்கை இரவினும் இளிவு’

குறுந்தொகை:282:2

முதலிய தொடர்கள் பொருளின் இன்றியமையாத தன்மை யினைப் புலப்படுத்தும், பொருள் தேடிவரத் தலைவன் செல்லும்பொழுது தலைவி தனித்துத் துயருறுகின்றாள். அவன் ’துன்பத்திறகு துணையாவதே தனக்கு இன்பந் தருவது என்கிறாள் :

“துன்பங் துணையாக நாடின் அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு?’

-கலித்தொகை : 6: 10-11

மேலும்,

‘ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்

ஒன்றினபர் வாழ்க்கையே வாழ்க்கை!”

-கலித்தொகை, 18 : 10-11

அன்றோ? எனவே தலைவன் செல்ல எண்ணியபோது,

தோழி,

“மற்றிவள் இன்னுயிர் தருதலும் ஆற்றுமோ

முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே!’

-கலித்தொகை,7 : 19-21

என்று தெளிவுறக் கூறியும், தலைமகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/48&oldid=1371612" இலிருந்து மீள்விக்கப்பட்டது