பக்கம்:கட்டுரை வளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 소 7

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுகின் வல்வரவு வாழ்வார்க் குரை’

-திருக்குறள் ; 1151 என்று கூறியும், தலைவன் தன் பயணத்தை நிறுத்த வில்லை. எனவே, தலைவன் பிரிந்து சென்ற பொழுது தலைவி பெரிதும் கலங்கி,

“வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்’

-திருக்குறள், 1261 என்று இரங்கத்தகு நிலையில் நெஞ்சம் நடுங்குகின்றாள். கணவனைப் பிரிந்த மகளிர் கூந்தலுக்கு எண்ணெய். இட்டு வாருதல் இல்லை, நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்’ என்று புறநானுாறு கூறும், கோவலனைப் பிரிந்த

கண்ணகி கால்களில் சிலம் பணியாமலும், இடையில் மேகலை அணியாமலும், செயற்கை அணிகலன்களை அணியாமலும். காதில் தோடில்லாமலும் கண்களில்

மையில்லாமலும், நெற்றியில் திலகமில்லாமலும், முகத்தில் புன் முறுவல் இல்லாமலும், கூந்தலில் எண்ணெய் இல்லாமலும் கையற்று வருந்தினாள்’ எனச் சிலப்பதிகாரம் கூறும்:

‘அஞ்செஞ் சீறடி யணி சிலம் பொழிய



மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண் முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப பவள வாணுதல் திலகம் இழ்ப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி ‘ -சிலம்பு, அந்திமாலைச் சிறப்புச் செய் காதை: 47.57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/49&oldid=1373278" இலிருந்து மீள்விக்கப்பட்டது