பக்கம்:கட்டுரை வளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க கால மகளிர் 51

என்று கூறிப்போந்தார். எனவே, மனைமாட்சி மகளிரிடத் துத் துலங்கவேண்டும் என்பதனை, அவரே.

‘மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனை மாட்சித் தாயினும் இல்’

-திருக்குறள் 52 என்றார்.

வள்ளுவர் குறிப்பிடும் வாழ்க்கைக் துணைநலம் உடையவர்களாகவே சங்க கால மகளிர் பழுதறத் துலக்க முறுகின்றனர். பெண்ணின் பெருமை பீடுற விளங்கிய பொற்காலம் சங்க காலமாகும்.

‘ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வாறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்’

-திருக்குறள் 50

என்ற நிறைநிலை சங்ககால மகளிர்தம் வாழ்வில் புலனா கின்றது. எனவேதான் வள்ளுவரும், மகளிரை வாழ்க்கைத் துணை’ என வகையுறப் பாராட்டியுள்ளார். பெண்ணைச் சுற்றியே உலகம் இயங்குகின்றது. எனவே, அத்தகு மெல்லியலார் பண்புகளின் உறைவிடமாயிருக்க வேண்டுவது பெரிதும் இன்றியமையாததாகும். இம் முறையிற் பார்ப்பின், சங்க கால மகளிர் அறத்தின் வழி இல்வாழ்க்கை ஆற்றிப்பெற்றோன் பெட்கும் பிணையாய், ஈன்று புறந்தரும் தாயாய் விளங்கி, வீடும் நாடும் விளக்க முறத் தொண்டாற்றினர் என்பது அங்கை நெல்லிக் கனி யெனப் புலனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/53&oldid=1373295" இலிருந்து மீள்விக்கப்பட்டது