பக்கம்:கட்டுரை வளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முல்லைப்பாட்டின் பெயர்ப்பொருத்தம் 53

‘குறிஞ்சிப்பாட்டு’ பட்டினப்பாலை’ எனும் மூன்றாகும். ‘மதுரைக் காஞ்சி’யும் நெடுநல்வாடை” யும் புறப்பொருள் பற்றியன. மற்ற ஐந்து பாட்டுகளும் புறப்பொருளைச் சார்ந்த ஆற்றுப்படை வகையினைச் சார்ந்தன. பத்துப் பாட்டு முழுவதிலுமே, உயர்ந்த, செறிந்த-அளவான கற்பனையினைக் காண்கிறோம், அக்காலத் தமிழர் தம் பீடு நிறைந்த பெருவாழ்வினைக் கண்டு இன்புறு கின்றோம். இது குறித்தே பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள்.

‘பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில்

கற்பனையே’ என்று புகழ்ந்து பாராட்டினார்.

பண்டைக் தமிழ்க் கவிஞர்தம் செய்யுளிடத்துப் பொருந்திய பொருளை ஆராயுங்கால், முதற்பொருள்’ எனவும், ‘கருப்பொருள்’ எனவும், உரிப்பொருள் எனவும் கூறப்பட்ட மூன்று பொருள்கள் காணப்பெறும். அவை சொல்லப் பெறுங் காலத்தில் முறைமையாற் சிறந் தனவாம். இதனைத் தொல்காப்பியனார்,

‘முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றே

நுவலுங் காலை முறை சிறந் தனவே

பாடலுட் பயின்றவை நாடுங் காலை.

-தொல். அகத்திணையியல் : 3

என்று குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் முதற்பொருள்

எனப்படுவது, நிலமும் காலமுமாகிய இரண்டினது

இயற்கை என்பர்.

முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிய இயல்புணர்ந் தோரே’

-தொல். அகத்திணையியல் : 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/55&oldid=1373300" இலிருந்து மீள்விக்கப்பட்டது