பக்கம்:கட்டுரை வளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 கட்டுரை வளம்

நிலத்தினை நானிலம்’ எனக் குறிப்பிடும் வழக்குப் பண்டைக் காலத்திலேயே உண்டு. எனவே, தொல் காப்பியனார்,

“மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேங்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.”

-தொல். அகத்திணையியல் : 5

என்று, காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத் திற்குத் தெய்வமாகத் திருமாலினையும், மலையும் மலை யைச் சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வ மாக முருகனையும், வயலும் வயலைச் சார்ந்த நிலமுமாகிய மருத நிலத்திற்குத் தெய்வமாக இந்திரனையும், மணல் பொருந்திய வளம் குறைந்த நெய்தல் நிலத்திற்குத் தெய்வ மாக வருணனையும், பழந்தமிழ் மக்கள் கொண்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இனி, முல்லைப்பாட்டின் பெயர்ப்பொருத்தத்தினை ஆராய்வோம்; சங்க இலக்கியங்களில் முதல், கரு, உரிப் பொருள்கள் சிறப்பாகப் போற்றப்பட்டன. முதற் பொருள் எனப்படுவது. நிலமும் பொழுதுமாகும்,பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். முல்லைக்குரிய நிலம் காடும், காட்டைச் சார்ந்த இடமு மாகும். கார் காலமும் மாலைப் பொழுதும் முல்லைத் திணைக்குரிய பொழுதுகளாகும். இதனைத் தொல்காப்பிய னார், காரும் மாலையும் முல்லை’ என்பர். பிற்காலத் தெழுந்த நம்பியகப் பொருள் மல்குகார் மாலை முல்லைக் குரிய என்று குறிப்பிடுகின்றது. முல்லைத்திணைக்குரிய கருப்பொருள்கள் தெய்வம் முதலான பலவாகும். முல்லைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/56&oldid=1373304" இலிருந்து மீள்விக்கப்பட்டது