பக்கம்:கட்டுரை வளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

\

முல்லைப்பாட்டின் பெயர்ப்பொருத்தம் 55

குத் தெய்வம் 'மாயோன்’ என்பது 'மாயோன் மேய காடுறை உலகமும்' என்ற தொல்காப்பிய நூற்பாவினால் பெறப்படுகின்றது.

தொல்காப்பியனார் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், பண் என்பனவும் பிறவும் கருப் பொருள்கள் எனக் குறிப்பர்;

‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப’

-தொல். அகத்திணையியல் : 30

உரிப்பொருளைப் பற்றிக் கூறவந்த தொல்காப்பியனார், குறிஞ்சித்திணைக்குக் கூடலையும், பாலைத்திணைக்குப் பிரிதலையும், முல்லைத்திணைக்கு இருத்தலையும், நெய்தல் திணைக்கு இரங்கலையும், மருதத்திணைக்கு ஊடலையும் திணை ஒழுக்கங்களாய்க் கூறுவர் :

'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே’

-தொல். அகத்திணையியல் : 1

பத்துப்பாட்டிற்கு உரையெழுதிய உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர், “முல்லைக்கு உணா வரகுஞ் சாமையும் முதிரையும்; மா உழையும் புல்வாயும் முயலும்; மரம் கொன்றையுங் குருந்தும்; புள், கானக் கோழியுஞ் சிவலும்; பறை, ஏறுகோட்பாறை; செய்தி, நிரை மேய்த்தலும் வரகு முதலியன களை கட்டலும் கடாவிடுதலும்; யாழ், முல்லை யாழ்; பிறவு மென்றதனால் பூ முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும், நீர் கான்யாறு, ஊர், பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/57&oldid=1397832" இலிருந்து மீள்விக்கப்பட்டது