பக்கம்:கட்டுரை வளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 கட்டுரை வளம்,

|

யுஞ் சேரியும் பள்ளியும்’ என்பர். முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள், இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்.

முதற்கண் இம் முல்லைப்பாட்டைப் பற்றியும் அதன் பெயர்ப்பொருத்தத்தினைப் பற்றியும் நச்சினார்க்கினியர் பின்வருமாறு குறிக்கின்றார் : ‘'இப்பாட்டிற்கு முல்லை யென்று பெயர் கூறினாா. முல்லை சான்ற கற்புப் பொருந்தியதனால், இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு வென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்தலென்னும் பொருள் முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையின், கணவன் வருந்துணை யும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று.’

முல்லை நிலத்திலே பூக்கும் மலர் முல்லைப் பூவாகும்” அந்நிலத்தில் வாழ் மகளிர் தம் கற்பு மிகுதி தோன்ற முல்லைப் பூச்சூடுதல் மரபு. முல்லை என்ற சொல்லுக்கே “கற்பு’ என்ற பொருளும் உண்டு. இதனை ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்’ என்று சிறுபாணாற்றுப் படையும்,

‘முல்லை சான்ற கற்பின்

மெல்லியள் குறுமகள் உறைவின் ஊரே’ -அகநானுாறு 274 : 13-14, நற்றிணை : 241 : 10-11

என்று அகநானுாறும் நற்றிணையும் குறிப்பிடுகின்றன’ சிறுபாணாற்றுப்படையில் வரும் ‘முல்லை சான்ற முல்லை யம் புறவின்’ என்ற தொடருக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர், இவை காலமுணர்த்தி இங்ஙனம் நிகழ்த்தா நிற்கவும், கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருந்த தன்மை யமைந்த முல்லைக்கொடி படர்ந்த அழகினையுடைய காட்டிடத்து’’ எனப் பொருள் எழுதினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/58&oldid=1373313" இலிருந்து மீள்விக்கப்பட்டது