பக்கம்:கட்டுரை வளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முல்லைப்பாட்டின் பெயர்ப் பொருத்தம் 57

இனி, முல்லைத்திணைக்கு உரியனவான முதல், கரு, உரிப்பொருள்கள் முல்லைப்பாட்டில் அமைந்து கிடக்கும் பான்மையினைக் காண்பதற்குமுன், முல்லைப்பாட்டின் அமைப்பினைச் சுருங்கக் காண்போம்.

பாட்டின் தொடக்கத்தில் கார்காலத்தின் வரவும். அது கண்டு தலைவனைப் பிரிந்த தலைவி, பெருமுது பெண்டிர் தேற்றவும் தேற மாட்டாதவளாய் வருந்தி நிற்கும் தோற்றமும், பின்னர் பாடி வீட்டில் போர் மேற் சென்ற தலைவனின் இருப்பும், ஆண்டு நிகழும் செயல் களும் கூறப் பெற்றுள்ளன. இறுதியில் தலைவன் தான் மேற்கொண்ட வினையில் வெற்றி பெற்றுத் திரும்பி வரும் தேரோசை, பிரிவுத்துயரால் நலிந்து கிடந்த தலைவியின் செவி குளிர ஆரவாரித்தலும், கார் கால வருணனையும் முல்லை நிலத்தின் இயல்பும் அழகுறக் கூறப்பெற்றுள்ளன:

‘கறுங்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்த்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயல் பொழிந்த சிறிபுன் மாலை’

-முல்லைப்பாட்டு 1-6

என்று இவ்வாறு முல்லைப்பாட்டு தொடங்குகிறது. இப் பகுதியில் முல்லைக்குரிய தெய்வமான திருமாலும், பெரும் பொழுதான கார்காலமும், சிறு பொழுதான மாலைக் காலமும் அழகுறப் புனையப்பட்டுள்ளன.

அடுத்து, தலைவனைப் பிரிந்து துயருற்று ஆற்ற மாட்டாத தலைவியினைப் பெருமுது பெண்டிர் விரிச்சி

கேட்டு வந்து, சொல்லி வற்புறுத்தி ஆற்றுவிக்கின்றனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/59&oldid=1373315" இலிருந்து மீள்விக்கப்பட்டது