பக்கம்:கட்டுரை வளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முல்லைப்பாட்டின் பெயர்ப்பொருத்தம் 59

‘காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ் சிறந்து

பூப்போல் உண்கண் புலம்புமுத் துறைப்ப”

என்பது முல்லைப் பாட்டு (22-23).

தலைவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை இல்லாமல் வருந்துவதே நெய்தலின் பாற்படும். ஆனால், இங்குத் தலைவியின் நம்பிக்கை அற்றுப் போய் விட வில்லை. கார்காலம் தொடங்கியும் கார் காலத்தில் வரு கிறேன்’ என்று கூறிப் பிரிந்து சென்ற தன் இன்னுயிர்த் தலைவன் வரவில்லையே என்றுதான் பிரிவுத் துயரால் கலக்கமுறுகின்றாள். முல்லைப்பாட்டின் இறுதிப் பகுதிகள் அவள் கொண்ட தனிமைத் துயரத்தினையும், அதுபொழுது தலைவன் வளையும் வயிரும் ஆர்ப்ப வெற்றியோடு திரும்பி வரும் தேரின் ஒசையும், குதிரைகளின் குளம்போசையும், அவள் செவிகளில் ஆரவாரித்தன என்பதையும் புலப் படுத்துகின்றன :

‘நீடுநினைந் தேற்றியும் ஓடுவளை திருத்தியும்

மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் ஏவுறு மஞ்ஞையின் கடுங்கிஇழை நெகிழ்ந்து

கிடந்தோள், அஞ்செவி நிறைய ஆலின............ துணைபரி தூக்கும் செலவினர் வினைவிலங்கு நெடுந்தேர் பூண்ட மாவே......’

-முல்லைப் பாட்டு 82-84, 88-89, 102-103

பெருமுது பெண்டிர் கூறிய தேறுதல் மொழிகளாலும்

‘கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை என்றபடி கணவன் கூறியாங்கு அவன் வருமளவு ஆற்றி இல்லறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/61&oldid=1373322" இலிருந்து மீள்விக்கப்பட்டது