பக்கம்:கட்டுரை வளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 கட்டுரை வளம்

கடமைகளை ஒம்பவேண்டும் என்பதனாலும், தலைவி,

தன் கையினின்றும் கழன்றோடுகின்ற வளையல்களை

மீண்டும் செறித்து, மயக்கம் கொண்டும், நெடுமூச் செறிந்தும், அம்புபட்ட மான் போல் வருந்தியும், அணி கலன்கள் நெகிழ்ந்தும் காணப்படுகின்றாள். இம்மட் டோடு இப்பாட்டு நின்றுவிட்டால் முல்லைத்திணை முற்றுப் பெற்றதாகாது. அதனால் வருந்திக் கிடக்கும் அவள் செவிகள் குளிர, வினை மேற்கொண்ட தலைவன் திரும்பி வரும் தேரில் பூட்டப்பெற்ற குதிரைகளின் குளம் போசை ஆரவாரித்தன என்று கூறிப் புலவர் பாடலை முடிக்கின்றார். அவ்வாறு புலவர் தலைவன் வெற்றியுடன் விரைந்து வருவதனைக் குறிப்பிடும் பொழுது, முல்லை நிலக் கருப்பொருளைச் செவ்விதின் அமைத்தும் கார்

காலத்தின் வரவைப் புலப்படுத்தியும் அமைக்கிறார் :

‘செறியிலைக் காயா அஞ்சனம் மலர

முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடல் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கானம் நந்திய செந்நிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின் திரிமருப்பு இரலையொடு மடமான் உகள எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக்கு ஒழிய”

- முல்லைப்பாட்டு 93.10.1

என்ற இவ்வொன்பது அடிகளில் முல்லை நிலக் கருப் பொருள்கள் பல இனிய பெற்றியுடன் அழகுறத் தீட்டப் பெற்றுள்ளன. காயாஞ்செடிகள் நீல மலரைப் பூத்திருக் கின்றன; இளந்தளிர்களைக் கொண்ட கொன்றை பொன் போல மிளிர்கின்றது, காந்தளம் பூக்கள் உள்ளங்கை போல் மலர்ந்திருக்கின்றன. தோன்றிப் பூக்கள் குருதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/62&oldid=1373338" இலிருந்து மீள்விக்கப்பட்டது