பக்கம்:கட்டுரை வளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முல்லைப்பாட்டின் பெயர்ப் பொருத்தம் 61

போலும் பூக்களைப் பூத்துள்ளன. பெய்த மழையால் பொலிவுற்ற வரகங் கொல்லையில் கலைமானுடன் பிணை மான் துள்ளித் திரிகின்றது. வள்ளியங்காட்டினைப் பின்னே போக விட்டுத் தலைவன் விரைந்து வருகிறான்.

இறுதியாக, “வஞ்சி தானே முல்லையது புறனே’ என்ற தொல்காப்பிய நூற்பாப்படி, முல்லை என்னும் அகத்திணைக்கு இயைந்த புறவொழுக்கமான வஞ்சி,’ இம்முல்லைப் பாட்டின் இடையில் அமைவுறப் பொருந்தி வருகிறது. தலைவி தலைவனைப் பிரிந்து காட்டின் நடுவே அமைந்துள்ள தன் மனைக்கண் இருப்பதுபோலத் தலைவ னும் தலைவியைப் பிரிந்து பகைவர் நாட்டிற்கு அரணான காட்டின்கண் அமைந்த பாடிவீட்டில் இருப்பான். ஆத லால், முல்லையும் வஞ்சியும் தம்முள் இயைந்து காணப்படு கின்றன. தலைவியின் இருப்பினையும், பிரிவுத் துயரினை யும் திறம்படக் கூறியவுடன் தலைவன் தங்கியிருக்கும் பாசறையின் அமைப்பினையும், ஆண்டு நிகழும் செயல் களையும் ஆசிரியர் பொருத்தமுற விளக்குகின்றார்.

இம்முறையில் சங்க காலத்துப் புலமை நல்லிசை யாரான காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நம்பூதனார் தாம் இயற்றிய முல்லைப்பாட்டிலே முல்லைத்திணைக்கு இயைந்த முதல், கரு, உரிப்பொருள் களையும, அதற்கு இயைந்த புறவொழுக்கமான வஞ்சித் திணையினையும் பொருளும் பொருத்தமும் சிறக்க அமைத் துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/63&oldid=1373341" இலிருந்து மீள்விக்கப்பட்டது