பக்கம்:கட்டுரை வளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5 வள்ளுவர் வகுக்கும் இன்பம்

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாடினார் அமரகவி பாரதியார். தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றிய வள்ளுவர் தந்த தமிழ்மறை உலகப் பொது மறையாய் மிளிர்கிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினா லும் வீட்டுப்பேற்றை உய்த்துணர வைத்த பெருமை அவருக்கே உரியது. வள்ளுவர் பெருமான் வழங்கிய முப்பாலும் ஒவ்வொரு வகையில் தனித்தனி கீர்த்திமிக்கனவா யிருக்கின்றன. 'அவர் தொடாதது ஒன்றுமில்லை; தொட்டதை அழகுபடுத்தாமல் விட்டதில்லை’ என்ற மேனாட்டு அறிஞரொருவர் கருத்துக்கு ஒள்ளிய உருவாக விளங்கு கிறார் வள்ளுவர். பேரின்பப் பெருவாழ்வை அடைந்து உலகம் உய்ய வேண்டுமென்றே தெய்வப் புலமைத் திருவள் ளுவ நாயனார் சிற்றின்பத்தின் சிறப்பைத் திட்பமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைப்பாராயினர். சங்கத் தமிழிலக் கியங்களிலே காணக்கிடக்கும் அனைத்து வகை அகப் பொருள் கருத்துக்களையும் நாம் வள்ளுவரின் காமத்துப் பாலில் பரக்கக் காணலாம். குறள் கொடுத்த கோமானின் காமத்துப்பால் அகப்பொருள் நுணுக்கங்கள் பல மிளிர்ந்து சிறந்து காணப்படுகிறது.

ஒத்த குணமும், ஒத்த நலமும், ஒத்த அன்பும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் உடையவராய்த் தலைவனும் தலைவியும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் இன்றி ஊழ் வினைப் பயனாய்த் தாமே எதிர்ப்பட்டுக் காதலித்துக் கலக்கும் முறையே களவு’ என்று நந்தமிழ் நூல்கள் நவிலு கின்றன. 'கற்பியல்’ என்று கழறப்படுவது, மேற் கூறிய வாறு கலந்த காதலர் இருவருர் கடிமணம் புரிந்து மக்க ளொடு மகிழ்ந்து மனையறம் காத்து, மிக்க காமத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/64&oldid=1374604" இலிருந்து மீள்விக்கப்பட்டது