பக்கம்:கட்டுரை வளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் வகுக்கும் இன்பம் 63

வேட்கை தீர்த்த காலையில், இவ்வுலக வாழ்க்கையின் நிலையாமை கண்டு துறக்கவின்பம்பெற முயல்வதேயாகும் களவியல், கற்பியல் என்று கூறப்படும் துறைகளைத்தான் வள்ளுவர் தமது காமத்துப்பாலில் அமைத்திருக்கிறார். அவர்தம் இன்ப இயல் குறளுக்கே சிறப்புத் தருவதாகும்.

எல்லாக் குண நலன்களும் பொருந்தித் தமக்கு ஒப்பா ரும் மிக்காரும் இல்லாத தலைவனும் தலைவியும், ஊழ் வினை உருத்து வந்து ஊட்ட, ஒரு பொழிலிடத்தே எதிர்ப் படுவர். இவ்வாறு பால்வழி உய்க்கப் பெற்று எதிர்ப் பட்டுக் கண்ட காலையில் தலைமகன் தலைவியைப் “தெய்வப் பெண்ணோ மயிலோ, மானிடப் பெண்ணோ’ என்று ஐயுறுவான். இதனை வள்ளுவர்’

‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு!”

-திருக்குறள் 1081

என்று ‘தகையணங்குறுத்தல்’ என்ற காமத்துப்பாலின் முதல் அதிகாரத்தில் வைத்துளளார். இவ்வாறு அவள் அழகுநலச் செவ்வியால் நெஞ்சம் பறிகொடுத்துப் பலவாறு புலம்பிய தலைவன், தலைவியின் கரிய மலர் போன்ற கண் களால் குறிப்பறிவான்.

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்’

-திருக்குறள் : 709 என்பதன்றோ குறள்:

தலைவன் தன்னை நோக்குங்கால் தலைவி நிலம் நோக்கியும், அவன் தன்னை நோக்காதபொழுது தான் அவனைக் கண்ணின் கடைக் கூட்டில் புன்முறுவல் நெகிழ நோக்குதலும், அன்னாரின் காதற்குறிப்யினைப் புலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/65&oldid=1374606" இலிருந்து மீள்விக்கப்பட்டது