பக்கம்:கட்டுரை வளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் வகுக்கும் இன்பம் 65.

உடலுக்கும் என்ன தொடர்போ, அத்தகைத்தே எனக்கும் தலைவிக்கும் இடையேயுள்ள தொடர்பு என்பான். தலை மகளோ “காதலர் எம் நெஞ்சில் இருக்கின்றார்; சூடான பொருளை உண்டால் அவர் வெம்மையுறுதலை எண்ணி, சூடான பொருளை உண்ண அஞ்சுகிறோம் என்று கூறுவாள். பின்னர், தலைவன் தலைவியைக் கூடிப் பிரிந்து செல்வான்.

இவ்வாறு கூடிச் சென்ற தலைவன், மீண்டும் இடந் தலைப்பட்டுத் தலைவியைத் தழுவிச் செல்ல நினைப்பான், தலைவன் பிரிவாற்றாது பெரிதும் வருந்தி வனப்பழிவதைக் கண்ட பாங்கன், அதற்குக் காரணம் என்னவென்று தலைவனைக் கேட்பான். தலைவன் தலைவியின் நலனைக் கூறிப் பள்ளத்துப் பாயும் வெள்ளம் போலத் தன்னுள்ளம் பாவை பின் சென்றதைத் தெரிவிப்பான். இது கேட்ட தலைவன் பாங்கன், தலைவனை இடித்துரைப்பான். அதற்கு மறுமொழியாக, “உருவின் திருவினளான தலைவியை நீ கண்டாயில்லை; கண்டால், இங்ஙனம் பேச மாட்டாய்’ என்பான். பாங்கன் தலைவியைப்பற்றிக் கூறச் சொல்வான். அதற்குத் தலைவன்,

“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.”

-திருக்குறள் : 1113 என்று தலைவியின் மேனி நலத்தை மிகுத்துரைப்பான். தலைவன் குறிப்பிட்ட விடத்தில் தலைவியைப் பாங்கன் கண்டு தலைவன் கூற்று மிகையன்றென்பதை உணர்ந்து, தலைவன் தலைவியைச் சேர உதவி புரிவான்.

பின்னர்த் தலைவன், தலைவியும் தோழியும் தமிய ராய்த் தினைப்புனத்தில் இருக்கும் பொழுது சென்று, ‘யானை சென்றதோ?’ என்று கேட்டுப் பின்னர், ‘மான் சென்றதோ?’ என்று வலியப் பேச்சுக் கொடுப்பான். இம்

க.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/67&oldid=1374610" இலிருந்து மீள்விக்கப்பட்டது