பக்கம்:கட்டுரை வளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66, கட்டுரை வளம்,

மட்டோடு அமையாமல், அணியும் தழையும் கையுறை யாகக் கொண்டு சென்று இரந்து பின்னிற்பான்.

“ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள.’

-திருக்குறள் : 1093

என்று தோழி அவர்கள் இருவரிடையிலும் காதல் உண் டென்பதை நிச்சயிப்பாள். பிறகு தலைவன் தோழியிடம்

தன் குறையைச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துவான்.

தழையும் கண்ணியும் கையிலேந்தி நிற்பான். தோழி அவன் நிலைக்கு இரங்காதவள்போல் இருப்பாள். உடனே தலைவன், ‘பெருங்காதலால் உழந்து வருந்தும் எனக்கு இனி மடலேறி உயிர் விடுதலே சால்புடைத்து, எனத் துணிவான் :

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி.

-திருக்குறள் : 1.131.

என்ற குறள் இதனைப் புலப்படுத்துகின்றது ‘நானமழிந்த, செயலன்றோ மடல் ஊர்வது?’ என்பாள் தோழி.

காணொடு கல்லாண்மை பண்டு டையேன்; இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்.’

-திருக்குறள் 1132

என்று கூறிப் “பேயும் கண்ணுறங்கும் நள்ளிருள் யாமத்து. நான் மடலேறி மடிவேன்?’ என்பான். இத்தகைய மன வுறுதியைக் கண்டு ஆற்றாளாய தோழி, தலைவன் கருத் தினைத் தானே முடிப்பதாகத் தேற்றுவாள்; அதன்பின் தலைவி மனங் கொள்ளுமாறு மெல்ல அவளிடம் பேசு வாள். பின்னர்த் தலைவியும் உடன்படுவாள். ------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/68&oldid=1374612" இலிருந்து மீள்விக்கப்பட்டது