பக்கம்:கட்டுரை வளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 கட்டுரை வளம்

ஏற்ற புணையில்லையே! எனப் புலம்புவாள்; கண்களை நோக்கியும் பசலையை நோக்கியும் வருந்தித் துடிப்பாள். முன் தலைமகளுடன் கூடி நுகர்ந்த இன்பத்தை நினைத் தாலும் பெருமகிழ்ச்சி தருதலால் தேனினும் காதல் இனி தென்று தெளிவாள்; கனவு கண்டு வருந்துவாள்; காதலனது அருளற்ற தன்மையை எண்ணிக் கண்ணிர் உகுப்பாள்.

“காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய்.”

-திருக்குறள் : 1.227

என்பாள். இதனால் தலைவி மெல்ல மெல்ல மேனி நலம் குன்றி விடுவாள். காம நோய் மறைக்கவும் இயலாத தொன்று.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.”

-திருக்குறள் : 1153 என்று தலைவி ஆற்றாமைப்பட்டு அலறித் துடிப்பாள்.

அதுகாலை, பொருள் வழிப் பிரிந்த தலைவன் மீண்டும் வந்து சேர்வான். ‘என் பிரிவால் எத்துணைத் துயர் உற்றனை கொல்?’’ என்று தலைவியின் நிலைக்குத் தலைவன் இரங்குவான். ஊட நினைத்த தலைவியின் கண்கள் தலைவன் கண்களோடு கூடிவிடும். இதனைத் தலைவி,

ஏழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.”

-திருக்குறள் : 1.285

என்று கூறுவாள். இவ்வாறு வாழ்ந்து இனிதான இல்லறம் ஒம்புவோர் இடையிலும் ஊடல் நிகழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/70&oldid=1374619" இலிருந்து மீள்விக்கப்பட்டது