பக்கம்:கட்டுரை வளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 கட்டுரை வளம்

‘துணியும் புலவியும் இல்லாயிற் காமம் கனியும் கருக்காயும் அற்று’

-திருக்குறள் 1306

என்றும் வள்ளுவர் ஊடலின் தன்மையைக் காட்டுகிறார், இவ்வாறு வளமாக வாழ்ந்த தலைவனும் தலைவியும் உலக நிலையைக் கண்டு இறுதியில் பேரின்ப வழிப்படுவர்.

இவ்வாறு வள்ளுவர்கண்ட காமம் அகப்பொருள் நுணுக்கங்கள் அனைத்தும் பொதிந்து காணப்படுகின்றது. பழந்தமிழகத்தின் காதல் வாழ்வினை, உள்ளங்கை நெல்லிக்கனி யெனச் செந்நாப்போதார் செப்பிச் செல்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/72&oldid=1374833" இலிருந்து மீள்விக்கப்பட்டது